வேளாங்கண்ணி கோவில் விடுதிகளில் தீயணைப்பு அதிகரிகள் ஆய்வு!

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வருகின்ற 29-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்குள்ள 200-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேளாங்கண்ணி கோவில் விடுதிகளில் தீயணைப்பு அதிகரிகள் ஆய்வு!

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா வருகின்ற 29 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் வேளாங்கண்ணியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

தீயணைப்பு துறை விடுதிகளில் ஆய்வு:

விடுதிகளில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவிகள் சரியாக செயல்படுகிறதா என்றும்,  விடுதி சமயற்கூடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர் இணைப்புகளின் தரம் குறித்தும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

செய்முறை விளக்கம்:

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ள மோனோ அமோனியம் சல்பேட் கருவியை ஆபத்து காலங்களில் எப்படி இயக்குவது குறித்தும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தீயணைப்புத்துறை சார்பாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.