வடபழனி முருகன் திருக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவம்.. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட வைபவம் இன்று தொடங்கியது

வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட வைபவம் இன்று தொடங்கியது.

வடபழனி முருகன் திருக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவம்.. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட வைபவம் இன்று தொடங்கியது

சென்னையின் பிரசித்தி பெற்ற வடபழனி ஆண்டவர் முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவம் வருடாவருடம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக இந்த விழாவானது நடைபெறவில்லை.

இந்தநிலையில் வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த ஜூன் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனை தொடர்ந்து வைகாசி விசாக பிரம்மோத்சவ முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட வைபவம் இன்று தொடங்கியது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து மாட வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.

மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடிக்க வெகு விமரிசையாக திருத்தேரோட்டம்  நடைபெற்றது. மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தேரோட்டத்தில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய இந்த வைகாசி பெருவிழா வருகின்ற 23- ம்தேதி பிரமோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.