எங்கப்பா... "700ல் இருந்து 300".. "800ல் இருந்து 200" பூக்களின் விலை அதிரடி சரிவு.. இது தான் காரணமா? - வியாபாரிகள் கூறுவது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் கடந்த ஒருவாரமாக உச்சத்தில் இருந்த பூக்களின் விலை தற்போது கடுமையாக சரிந்துள்ளது.

எங்கப்பா... "700ல் இருந்து 300".. "800ல் இருந்து 200" பூக்களின் விலை அதிரடி சரிவு.. இது தான் காரணமா? - வியாபாரிகள் கூறுவது என்ன?

தோவாளை மலர் சந்தை பூக்கள் விற்பனைக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விளையும் பூக்கள் விற்பனைக்காக தோவாளை மலர் சந்தைக்கே கொண்டு வரப்படும். இதேபோல், மதுரை, ஓசூர், திண்டுக்கல், ராயக்கோட்டை மற்றும் பெங்களூருவில் இருந்தும் பூக்கள் இங்கு விற்பனைக்காக வருகின்றன. 

இந்நிலையில், பங்குனி உத்திரம், கோவில் திருவிழாக்கள் காரணமாக கடந்த ஒரு சில வாரங்களாக உச்சத்தில் இருந்த பூக்களின் விலை, தற்போது கடுமையாக சரிந்துள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பிச்சி பூ, இன்று 700 குறைந்து 300 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், மல்லி பூ, 800 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விழாக்காலம் முடிந்த நிலையில் பூக்களின் தேவை குறைந்ததே விலை குறைவுக்கு காரணம் என வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.