தமிழ் மண்ணின் மகள் குற்றச்சாட்டு; திமுகவின் பதில் என்ன ?

தமிழ் மண்ணின் மகள் குற்றச்சாட்டு; திமுகவின்  பதில் என்ன ?

தமிழ் மண்ணின் மகள் குற்றச்சாட்டு; திமுகவின்  பதில் என்ன ?

மத்திய அரசை குறை கூறும் மாநில அரசு தமிழக மக்கள் மீது கட்டண உயர்வை சுமத்துகிறது எனவும் , திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பெண்களை அவமதிக்கும் வகையில் செயல்படுகின்றனர் எனவும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தமிழக அரசு மீது  குற்றம்  சாட்டியுள்ளார்.

குஷ்பூ எழுப்பும் கேள்விகள்  :

வடகிழக்கு பருவ மழை காலம் துவங்குவதற்கு முன்னரே மழைநீர் வடிகால் பணிகளை முடிக்காதது ஏன்?
தவறான சிகிச்சை அளித்து உயிரிழந்த வீராங்கனை குடும்பத்திற்கு காசு கொடுத்தால்  உயிர் திரும்ப பெற வருமா ?  தேர்தல் அறிக்கையில் சொன்னது  போல் பால் மற்றும் மின் கட்டண  உயர்வை  குறைத்தீர்களா?  பெண்களை அவமானப்படுத்தும் அரசு , இதுதானா உங்க ஆட்சி? என குஷ்பூ தொடர் கேள்வி எழுப்பினார்.

கண்டன ஆர்ப்பாட்டம்  :

சென்னை அடையாறில் உள்ள சாஸ்திரி நகரில் பாஜக சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து குஷ்பூ மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும் பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும்  கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் தெரிந்து கொள்ள :https://malaimurasu.com/2-crore-compensation-should-be-paid

வாக்குறுதியை நிறைவேற்றினரா  முதல்வர் :

ஆர்ப்பாட்டத்தில் பேசிய  குஷ்பூ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மற்றும் பால் விலை,மின்கட்டண விலையை குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்ததும்  விலையை உயர்த்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக  திமுக அரசு செயல்பட்டு வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பெண்கள் பல்வேறு வகைகளில்  அவமானப்படுத்தப்படுவதாக குறை கூறியுள்ளார்.திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு முன்பிருந்தே  ஜிஎஸ்டி இருந்தது, ஆனால் தற்போது திமுக அரசு  தமிழகத்தில் மின்கட்டணம்,பால் விலை உயர்வு,உள்ளிட்டவற்றை ஏற்றிவிட்டு மத்திய அரசின் மீது பழி சுமத்துவதாக விமர்சித்துள்ளார்.

கண்டனம் தெரிவித்த குஷ்பூ

தேர்தல் அறிக்கையில் கூறியபடி  திமுக அரசு செய்யவில்லை,திமுக அரசை ஆட்சியில் அமர வைத்த மக்களுக்கு தெரியும்,அனைத்தும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என கேலி செய்தார்.பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை, தன்னை பற்றி அவதூறு பேசிய திமுக பேச்சாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள :https://malaimurasu.com/All-party-meeting-on-10-percentage-reservation-Is-BJP-participating

தமிழ் மண்ணின் மகள் கேள்வி;பதில் கூறுமா  திமுக அரசு?

தமிழ் மண்ணின் மகளாக தமிழகத்தில் நடக்கும் தவறுகளை நான் கேள்வி கேட்பேன், இதற்கு திமுக அரசு பதில் கூறித்தான் ஆக வேண்டும் என சூறாவளி போல் பேசினார்.அப்பாவி மக்கள் மீது விலை உயர்வு,கட்டண உயர்வை உயர்த்திவிட்டு கோடிக்கணக்கில் ஊழல் பணத்தை அமைச்சர்களும் முதலமைச்சரும் பெறுவதாக வினவியுள்ளார் .பெண்களை  இழிவுபடுத்துவதை பார்த்து சிரித்து கொண்டிருக்கும் மனநிலை தான் திமுக அமைச்சர்களின் நிலை அதனை யாரும் தட்டி கேட்க கூட முன்வரவில்லை என விமர்சித்தார்.