கடற்கரை பகுதியில் திமிங்கல சுறாக்கள் !!

கடற்கரை பகுதியில் திமிங்கல சுறாக்கள் !!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 10 நாட்களாக கடலுக்குச் சென்று மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் ஆழ்கடல் அரிய வகை திமிங்கலசுறாக்கள் 100க்கும் மேற்பட்ட திமிங்கல சுறாக்கள் கடற்கரை பகுதிகளுக்கு உணவு தேடி வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சுமார் 30 அடி நீளம் உள்ள ஆழ்கடல் திமிங்கலசுறாக்கள் உணவு தேடி மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிக்கு வந்ததைக் கண்டு ஆச்சரியத்துடன் பார்த்த மீனவர்கள் தங்களின் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, மீனவர் மனோஜ் குமார் பேசும்பொழுது, சாதாரணமாக திமிங்கல சுறாக்களை பார்க்க வேண்டுமென்றால் கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்கு சென்றால் தான் சாத்தியம் என்றும், அதிகளவிலான சிறிய வகை மீன்களை உண்ணுவதற்காக ஆழ்கடல் பகுதியில் இருந்து கரை பகுதிகளுக்கு வருவதாக தெரிவித்தார்.

ஆனால் கடற்கரை ஓரம் இதுபோன்று பார்ப்பது அரிதினும் அரிதானது என்றும் இறைத் தேடி 100க்கும் மேற்பட்ட திமிங்கல சுறாக்கள் இதுபோன்று கூட்டமாக வந்ததில்லை என்று தெரிவித்தார்.

சதுரங்கபட்டினம் பகுதியில் அதிக அளவில் திமிங்கல சுறாக்கள்  சுற்றி திரிவதாகவும், சிறிய வகை மீன்களை மட்டும் உட்கொள்ளும் என்பதால் இந்த வகை திமிங்கல சுறாவால் ஆட்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிக்க || பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்!!