சறுக்கி விளையாடுவது பலூன் வீடு பறந்து விபத்து.. 4 குழந்தைகள் படுகாயம்

குழந்தைகள் சறுக்கி விளையாடும் அரண்மனை வடிவிலான பலூன் வீடு காற்றில் பறந்ததில் 4 குழந்தைகள் உள்பட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பொழுது போக்கு பூங்காக்களில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்காக அரண்மனை வடிவில் ராட்சத பலூன்கள் வைக்கப்பட்டிருக்கும்.

இதில் சின்னஞ்சிறு குழந்தைகள் சறுக்கி விளையாடுவது வழக்கம். அவ்வாறு பெலாரஸில் திருவிழா ஒன்றில் அமைக்கப் பட்டிருந்த விளையாட்டு பலூன் பலமாக வீசிய காற்றில் பறந்து சென்றது. இதில் 4 குழந்தைகள் உள்பட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.