மகாராணியுடையது என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

மகாராணி எலிசபெத் மறைந்த நிலையில், அவரது பொருட்கள் சில ஏலத்திற்கு விடப்பட்டன. அதில் அதிகமாக மக்கள் கவனத்தை ஈர்த்தது குறித்த தகவல் இதோ!!!

மகாராணியுடையது என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

மகாராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததை ஒட்டி, உலகம் முழுவதும், தங்களது வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர். 80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பிரம்மாண்ட ஆட்சியை நடத்தி வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், மக்கள் மனதில் நீங்காத ஒரு இடம் பிடித்தவர் என்பது அவரது இறப்புக்கு கண்ணீர் சிந்திய அனைத்து உள்ளங்களுமே சாட்சி.

உலகிலேயே மிக பிரபலமான அரசாட்சி நடக்கும் பிரிட்டெயின் கூட்டு நாடான பிறகு, ஆட்சிக்கு வந்த 12ம் ஏகாதிபதி இவர் என்பதும், ஆங்கிலேய அரசாட்சியின் வரலாற்றில், அரசர் / மகாராணியின் முடிசூட்டு விழாவை உலகெங்கும் பார்த்த முதல் மகாராணி என்ற பெருமையும், இருப்பதிலேயே நீண்ட கால ஆட்சி செய்த மகாராணி என்ற பெருமையும் இவருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சார்லஸ் இவ்வளவு மோசமானவரா? இதில் தற்போது ராஜ மகுடம் வேற!!!

அவ்வகையில். மகாராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய அனைத்து பொருட்களும், வரலாற்று சிறப்பு மிக்கவை என்பது குறிப்பிடத்தக்கது. சின்னங்களாக இருக்கும் அந்த பொருட்கள், மகாராணி இரண்டாம் எலிசபெத் இறந்த நிலையில், ஏலத்திற்கு விற்கப்படுவது எதிராப்ர்த்தது தான். ஆனால், அவர் இறந்த அடுத்த நாளே ஒரு பொருள் விற்பனைக்கு வந்ததோடு, இந்த பொருளெல்லாம் லட்சம் கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வி தான் பெரிதாக முளைத்து நிற்கிறது. அப்படி என்ன விற்பனைக்கு வந்தது?

How to make tea exactly like the Queen | Express.co.uk

90களில், மகாராணி இரண்டாம் எலிசபெத் குடிக்க பயன்படுத்திய டீ- பை தான் அந்த பொருள். அதுவும், சாதாரண அந்த டீ- பையானது, சுமார் 12,000 டாலர்களுக்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், 9.5 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளது. 90களில், மகாராணி இரண்டாம் எலிசபெத் டீ குடித்த பின் அந்த டீ- பை பிரிடெயினின் ‘விண்ட்சர் மாளிகையில்’ இருந்து திருடப்பட்டதாகவும், அது, தற்போது ஈ-பே எனப்படும் ஒரு ஆன்லைன் செவை மையத்தில் விற்பனைக்கு வந்ததன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

”மிகவும் அரிய, பிரிட்டெயின் நாட்டு மகாராணி இரண்டாம் எலிசபெத் குடித்த டீ- பை” என தலைப்பிடப்பட்ட அந்த தளத்தில், “1990களில், விண்ட்சர் மாளிகையில், கரப்பான் பூச்சி தொல்லை காரணத்திற்காக வருகை தந்த சிறப்பு அதிகாரியை வரவழைத்த போது, அவரால் இந்த டீ- பை திருடப்பட்டது. இந்த டீ- பை தான் மகாராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்தினார் என்பதை, 1998ம் ஆண்டு பத்திரிக்கையாளரை சந்தித்த வேளையில் குடித்தது என பார்த்து தெரிந்து கொள்ளலாம்” என எழுதப்பட்டிருந்ததாகக் கூரப்படுகிறது.

மேலும் படிக்க | இங்கிலாந்து மன்னராக முடிசூடும் சார்ல்ஸ்.. மதத்தை கடந்து சேவையாற்றுவேன் என உறுதி..!

இதில் என்ன இருக்கிறது? அவர் அப்படி வெளியிட்டால் என்ன, யார் அதை அவ்வளவு விலை கொடுத்து வாங்கப்போகிறார்? என நீங்கள் கேட்கலாம்! அதுதான் இல்லை. ஆங்கிலேயர்கள் பொதுவாகவே இது போன்ற பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள் பல லட்சங்களுக்கு அந்த தளத்தில் வாங்கியிருக்கும் பட்சத்தில், இதனை யார் வாங்கப்போகிறாரோ என்ற கேள்வி தான் இப்போது எழுந்துள்ளது. ஒரு சிலர், ”என்ன தான் ராணியாக இருந்தாலும், டீ- பைக்குலாமா 9 லட்சம் கொடுக்கறது? ஒரு நியாயம் வேண்டாமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Builder stunned 'as Queen makes him cup of tea at Buckingham Palace' -  Mirror Online