விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை...விசாரணைக்கு உத்தரவு!

விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை...விசாரணைக்கு உத்தரவு!

இலங்கை அதிபர் மாளிகை, அலரி மாளிகை மற்றும் அதிபர் அலுவலகம் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான காவல் துறை தலைவர் தேசபந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு காவல் துறை தலைவர் சந்திர குமார மற்றும் மேல் மாகாண குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரோஹான் பிரேமரத்ன ஆகியோருக்கு அவர் இந்த உத்தரவை விடுத்துள்ளார்.அதிபர் மாளிகை, அடிவர் அலுவலகம் ஆகியவற்றுக்குள் சென்றவர்கள் அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் விலையுயர்ந்த பொருட்களை திருடிச்சென்றுள்ளதாகவும் தேசபந்து தென்னகோன் இந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.

உடனடியாக இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சாட்சியங்கள் அழிக்கப்படும் முன்னர் சாட்சியங்களை சேகரிக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தென்னகோன் கூறியுள்ளார்.