கொள்ளை அடித்து விட்டு, வீட்டை பூட்டி சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் கொட்டை உடைத்து வீட்டில் இருந்த பத்து பவுன் நகை 52 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளை அடித்து விட்டு,  வீட்டை பூட்டி சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...

ஓமலூர்: மேச்சேரி பிரிவு ரயில்வே கேட் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகரன் இவர் சிந்தாமணியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனோசித்ரா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் கடந்த 3-ந்தேதி இரவு ராஜசேகரனின் மாமா இருதயசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் குடும்பத்துடன் சென்னை கிண்டியில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று  உள்ளனர். அங்கு மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைத்து கதவு திறந்த நிலையில்  இருந்தது.

மேலும் படிக்க | மாலைமுரசின் எதிரொலி... கமிஷனரின் அதிரடி ஆக்‌ஷன்...

உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க செயின் மோதிரம் உள்பட 10 பவுன்  நகைகள் மற்றும்  ரூபாய் 52 ஆயிரம் பணம் திருட்டுப் போனது தெரியவந்தது. இது பற்றி ஓமலூர் போலீசில் ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டனர். மோப்பநாய் வீட்டை சுற்றிக்கொண்டு தாரமங்கலம் ரோட்டில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை சென்று திரும்பியது.

மேலும் படிக்க | "மின்னல் ரவுடி வேட்டை" 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது...

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | திருச்சி: பூட்டியிருந்த வீட்டில் 105 பவுன் நகை கொள்ளை.. சிசிடிவி ஹார்டு டிஸ்குகளையும் விட்டு வைக்கவில்லை..!