உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் சிங்குடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை...

மத்திய அமைச்சரவை கூட்டம்   நாளை நடைபெற இருக்கும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் சிங் ஆகியோருடன்  பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். .

உள்துறை அமைச்சர் அமித் ஷா,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் சிங்குடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை...

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை காலை 11 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரசின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து  ஆலோசனை நடத்த  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் காஷ்மீர் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை மேற்கொண்டார். மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த ஆலோசனையில்  கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் நிலவரம் குறித்தும்,ட்ரோன் தாக்குதல் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள் 27ம் தேதி அதிகாலை ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானை சேர்ந்த லக்ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பாதுகாப்புப்படையினர் கூறியுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை இது குறித்த  விசாரணை மேற்கொண்டுள்ளது. 

இந்த சூழலில் பிரதமர் நரேந்திரமோடியின் வீட்டில் இன்று மாலை நான்கு மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆகியோருடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை மேற்கொண்டார்.