நிறைவேறாத முதல் காதல்.. எதிரியாக அமைந்த தேசப்பற்று… முதியவரின் நெகிழ்ச்சி கதை…

ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் காவலராக இருக்கும் 82 வயது முதியவரின் முதல் காதல் கதை அனைவரையும் உருக வைத்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தின் மையத்தில் உள்ள குல்தாரா நகரத்தின் 82 நுழைவாயில் காவலராக  தற்போது பணியாற்றி வரும் 82 வயது முதியவர் 50 ஆண்டுகளுக்கு முன் ஒட்டகம் வளர்க்கும் பணியில் இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து மெரினா என்ற பெண் ஜெய்சால்மருக்கு  பாலைவன சஃபாரிக்காக  வருகை தர, அவருக்கான  பாலைவன கைடாக முதியவர் சென்றுள்ளார்.  அப்போது 30 வயதில் இளமை ததும்பும் இருவரும் கண்டதும்   காதல் கொள்கின்றனர்.

மெரினாவின் ஐந்து நாள் பயணத்தின்போதும் இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை.கடைசியில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. நினைத்தது போலவே ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முன்பு, மெரினா தனது காதலை உணர்ந்து அந்த முதியவரிடம் காதலை சொல்லி இருக்கிறார்.

அவர் ‘ஐ லவ் யூ’ என்ற மந்திர வார்த்தைகளை என்னிடம் சொல்லிய அந்த நாளை தன்னால் மறக்க முடியாது என தெரிவித்த அவர், திருப்பி ஒரு வார்த்தையும் சொல்ல முடியாத அளவுக்கு வெட்கப்பட்ட என் உணர்வுகளை புரிந்து காதல் இருப்பதை அவர் உணர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மெரினா ஆஸ்திரேலியா திரும்பிச் சென்ற பிறகும் இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர்.  ஒவ்வொரு வாரமும்  அங்கிருந்து வரும் கடிதம், =சில வாரங்களுக்குப் பிறகு, அவரை ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கும் வண்ணம் இருந்தது.

சும்மா இருப்பாரா நம் ஆட்கள்… குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் ரூ.30,000 கடன் வாங்கி மெல்போர்னுக்கு ஒரு டிக்கெட், விசாவி வாங்கிக் கொண்டு  விமானத்தில் பறந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 3 மாதங்கள் இருந்த முதியவருக்கு மெரினா ஆங்கிலம் கற்பித்துள்ளார். மேலும்  ‘திருமணம் செய்து ஆஸ்திரேலியாவில் குடியேறலாம்’ என்று சொல்லவும் சிக்கல்கள் எழுந்தது. இந்திய தாய்நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இல்லை என முதியவர் கூற, மெரினாவுக்கு இந்தியா வர விருப்பமில்லை எனக்கூற இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.

பிரிந்த நாட்களில் மெரினா நிறைய அழுதாலும்,  வேதனையை மறைத்து நான் அவளை விட்டு விலக வேண்டி இருந்ததாக கூறும் முதியவர்,  சில ஆண்டுகளுக்குப் பிறகு குடும்ப அழுத்தம் காரணமாக வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். பின் தனது குடும்பத்திற்கு ஆதரவாக என் கிராமத்திற்கு அருகில் கைவிடப்பட்ட இந்தியாவின் பேய் நகரமான குல்தாராவின் நுழைவாயில் காவலராக வேலைக்குச் சேர்ந்தேன்.

ஆண்டுகள் பல ஆனாலும் மெரினாவைப் பற்றி நான் நினைத்துக்கொண்டிருந்ததாகவும்,  ‘அவள் திருமணம் செய்துகொண்டிருப்பாளா?’, ‘நான் அவளை மீண்டும் பார்க்கலாமா?’ – இப்படித்தான் எனது எண்ணம் இருந்துகொண்டே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இதை விசாரித்து அவளுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை. காலங்கள் செல்ல செல்ல நினைவுகள் மங்கி குடும்பப் பொறுப்புகள் கூட  கவனம் பெற்றது.

2 ஆண்டுகளுக்கு முன்பு முதியவரின் மனைவி காலமான நிலையில்,  மகன்கள் அனைவரும் திருமணமாகி தனியாக சென்றுவிட்டார்கள். இனி வாழ்க்கையில் காண என்ன உள்ளது என்று நினைத்தபோது மீண்டும் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  மெரினா எழுதிய கடிதம் முதியவருக்கு கிடைத்துள்ளது.  ‘எப்படி இருக்கிறாய் நண்பா’ என அவள் எழுதிய வரிகள் தனக்கு வாழ்வில் ஊக்கத்தை கொடுத்ததாக கூறும் அவர், அவள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், அவள் விரைவில் இந்தியாவுக்கு வருவதாகவும் சொன்னதாக கூறி நெகிழ்கிறார்.

அவள் என்னைக் கண்டுபிடித்த அன்றிலிருந்து இன்று வரை தினமும் என்னை போனில்  அழைத்து பேசுகிறாள். எங்களுக்குள் உள்ள பிணைப்பு இன்றும் கூட குறையவில்லை. நான் மீண்டும் 21 வயதைப் போல உணர்கிறேன் என முதியவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலம் என்னவென்று தெரியாத எனக்கு, முதல் காதலி வாழ்க்கையில் திரும்பி வந்து தினமும் என்னுடன் பேசுவது என்பது என்னால் விளக்க முடியாத ஒரு உணர்வு எனவும் கூறியுள்ளார்.

“என்ன ஒரு அழகான கதை! அடுத்து என்ன நடக்கிறது என்பதை நான் அறிய விரும்புவதாக இந்த கதையைக் கேட்ட பலரும் தெரிவித்துள்ள நிலையில்,  மெரினா இந்தியாவுக்கு வரும்போது தயவுசெய்து தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.