என்றும் வசீகரிக்கும் புன்னகை… நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று…

தமிழ் சினிமாவில் 19 ஆண்டுகளாக கோலோச்சி வரும் நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள் இன்று.

Trisha In Vinnaithandi Varuvaya Hd - 1920x1080 - Download HD Wallpaper - WallpaperTip

1983ம் ஆண்டு மே4ல் பிறந்த த்ரிஷா சர்ச் பார்க்கில் ஸ்கூலிங் முடித்தார். தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரியில் படித்தார்.

Trisha Krishnan recalls how her life changed 21 years ago when she was crowned Miss Chennai | Celebrities News – India TV

படிக்கும்போதே மாடலிங்கில் ஆர்வம் வர 1999ல் மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கையோடு 2001ல் மிஸ் இந்தியா போட்டியில் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் விருதை தட்டிச் சென்றார்.

Abhiyum Naanum - JungleKey.in Image #50

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக சாதித்த சென்னைப் பெண்கள் மிகவும் குறைவு தான். இப்படியான நிலையில் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த த்ரிஷா 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் . அதற்கு முன்னதாகவே இயக்குநர் பிரியதர்ஷனின் ’லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார். ஆனால் மௌனம் பேசியதே முதலில் வெளியாகியிருந்தது.

சந்தியாவாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய த்ரிஷாவின் மூன்றாவது படமாக சாமி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் தாக்கம் தமிழ் சினிமா த்ரிஷாவை கொண்டாட துவங்கியது. 2004ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் தனலட்சுமியாகவே தனிமுத்திரை பதித்த அவர் அதன்பின் கோலிவுட், டோலிவுட் என கனவுக்கன்னியாக ஜொலித்தார் த்ரிஷா.

‘உனக்கும் எனக்கும்’படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிப்பில் கலக்கிய த்ரிஷா, 2008ல் வெளியான “அபியும் நானும்” படத்தில் பிரகாஷ்ராஜின் செல்ல மகள் அபியாக நடித்து தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலுள்ள அப்பாக்களின் செல்ல மகளாகவே மாறினார்.

Ghilli trends on Twitter as the Vijay starrer breaks TRP records during lockdown

இதே காலக்கட்டத்தில் நயன்தாரா, அசின் போன்றவர்கள் போட்டிக்கு இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார் த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார் த்ரிஷா.

Image

2010ம் ஆண்டு வெளியான “விண்ணைத்தாண்டி வருவாயா”, 2018ல் வெளியான “96” இந்த இருபடங்களும் அவரின் சினிமா கேரியரில் மைல்ஸ்டோன் என்றே சொல்லலாம்.

From Sami to Kodi: Tollywood films which saw Trisha Krishnan in a powerful on-screen character

கொடி படத்தில் “ருத்ரா”வாக நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டியிருப்பார்.50 வது படமாக அரண்மனை-2 வில் நடித்த த்ரிஷா தற்போது ஹீரோயின் முக்கியத்துவமுள்ள கதைகளின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவரின் சினிமா கேரியரில் “கில்லி” தனலட்சுமி, “உனக்கும் எனக்கும்” கவிதா, “அபியும் நானும்” அபி,“விண்ணைத்தாண்டி வருவாயா” ஜெஸ்ஸி, “என்றென்றும் புன்னகை”பிரியா, “என்னை அறிந்தால்” ஹேமானிகா, “கொடி”ருத்ரா, “96” ஜானு ஆகியவை என்றும் அவரது பெயர் சொல்லும் கிளாசிக் கேரக்டர்கள்.

சினிமா வாழ்க்கையை தவிர்த்து செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் த்ரிஷா. மேலும் யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராக 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

சேர்ந்து நடிக்க ஆசைப்படும் ஹாலிவுட் நடிகர் யார்? - த்ரிஷா சுவாரஸியமான கேள்வி பதில் | Webdunia Tamil

த்ரிஷா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவர். அந்த அன்பின் உச்சமாக இன்றளவும் டிவிட்டர் அக்கவுண்டில் தனது பக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கையால் விருது பெறும் புகைப்படத்தை கவர் போட்டோவாக வைத்துள்ளார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா…!

 

 

 

Back to top button