சம்பவம் வேற மாதிரி இருக்கே… அதுவும் 100 தொகுதிகளா… சூரசம்ஹாரம் செய்யப்போகும் தினகரன்!!

தென் மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் என சுமார் 80 தொகுதிகளில் அமமுக கூட்டணியால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு இழக்கக்கூடும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. முன்னணி வாரஇதழ், தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் என பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதி, ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவை சம்பவம் செய்தது அமமுக தான். இதேபோல் கடந்த 22 தொகுதி இடைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் பெரியகுளம், ஆண்டிபட்டி, திருப்பரங்குன்றனம் உள்பட 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவை சூரசம்ஹாரம் செய்ததும் இதே தினகரன் கட்சி தான்.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் அமமுகவால் 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கலாம் என ஜூனியர் விகடன்,  மாலை முரசு, தந்தி டிவி உள்ளிட்ட முன்னனி  ஊடங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவற்றில் எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்கே சாதகமாக இருக்கிறது. அதிமுகவின் கொங்கு மண்டலத்தில் கூட திமுக கடும் போட்டியை இந்த முறை தந்துள்ளதாக கணிப்புகள் சொல்கின்றன. இந்நிலையில் ஏராளமான தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன.

தென்மாவட்டங்களில் எடுத்துக்கொண்டால், கோவில்பட்டியில் கிட்டத்தட்ட டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்றே கணிப்புகள் பல கூறியுள்ளன. இதேபோல காரைக்குடி, உசிலம்பட்டி, ஒட்டப்பிடாரத்தில் திமுகவிற்கு அமமுகவிற்குமே கடுமையான போட்டி இருக்கும். அந்த அளவிற்கு அதிமுகவின் வாக்குகளை அமமுக கண்டம் செய்துவிடும் என்கிறது கருத்துக்கணிப்பு.

தற்போதைய கணிப்புகள் படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஶ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் போன்ற தொகுதிகளிலும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குலம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு அமமுக கடும் சவலாக இருக்கும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில்  4 தொகுதிகளிலும் , சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும், மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு மற்றும் உசிலம்பட்டியிலும், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர், திருச்சுழியிலும், தேனி மாவட்டத்தில்  3 தொகுதிகளிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் அமமுகவால் அதிமுகவின் வாக்குகள் பாதிக்ககப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

இதேபோல் டெல்டா மாவட்டங்களில் பார்த்தால் கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஶ்ரீரங்கம் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, திருமயம் ,ஆலங்குடி. அறந்தாங்கி, வேதாரண்யம், பூம்புகார், மன்னார்குடி, திருவிடைமருதூ திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், அரியலூரில் அமமுகவால் அதிமுகவின் வாக்குகள் பாதிக்கபடலாம் என்கின்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

சேலம், திருப்பூர், கோவை, கடலூர், நாமக்கல், ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிள் அதிமுகவின் வெற்றியை அமமுக முட்டுகட்டையாக இருக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

விருத்தாச்சலம், புவனகிரி, செஞ்சி, மயிலம், வாணியம்பாடி, குடியாத்தம், உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கதறவிடும் என சொல்கிறது கருத்துக்கணிப்பு முடிவுகள்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில தொகுதிகளில்  அ.ம.மு.க கூட்டணியால் அ.தி.மு.க கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கலாம் என்கிறது. இதேபோல் சென்னையின் பெரும்பலான தொகுதிகள் மற்றும் கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜகயை ம.நீ.ம வெச்சு செய்யப்போகும் அபாயமும் உள்ளதாக தெரிகிறது.

இதில் பயங்கரமான ட்விஸ்ட் என்னன்னா? தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு போடி தொகுதியில் சிறப்பான சம்பவத்தை நிகழ்த்தப்போவது அமமுக தான், ஆமாம் போடிநாயக்கனூர் தொகுதியில் கணிசமான வாக்குகளை அமமுக வாங்கிவிடும், அதனால் ஜெயிக்கறது கொஞ்சம் சிரமமென்றே சொல்கிறது.

கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கும் அமமுக கூட்டணி இருக்கிறது, அமமுகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் என தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் சமுதாய வாக்குகள் உள்ளன. இதுபோக. தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ உள்ளதால் பல தொகுதிகளில் ஜெயிக்கவும், செல்வாக்கான வேட்பாளர்கள் இரணடாம் இடத்தை பிடித்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை என்கிறது கருத்துக் கணிப்பு முடிவுகள்.