கொங்கு அதிமுக கோட்டைதான்… திமுகவை விரட்டியடித்த வேலுமணி ஸ்கெட்ச், கடைசிவரை திணறல்!!

திமுக கொங்குவில் கால் பதிக்க முடியாமல், வேலுமணியின் வியூகத்தை வெல்லமுடியாமல் திணறியுள்ளது. தெற்கு, வடக்கு மண்டலங்களில் வலுவாக இருந்த திமுக, மேற்கு மண்டலத்தில் கோட்டை விட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு கொங்கு மண்டலத்தை வேலுமணியிடமிருந்து பறித்துவிடும் என சொல்லி வந்தது திமுக ஆனால், ஒரே தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது.

அது ஏன்? வேலுமணிக்கு நிகரான பணம்பலம் மற்றும் சாதீய செல்வாக்குடைய வேட்பாளர்தான் திமுகவிலும் நிறுத்தப்பட்டார். வேலுமணியிடம் செல்லுபடியாகவில்லை, கடந்த 2019 எம்பி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் க்ளீன் ஸ்வீப் ஆனதும், எப்படியும் கொங்கு மண்டலத்தில் கொத்தாக தூக்கிவிட ஸ்கெட்ச் போட்டது திமுக ஆனால் ஏற்கனவே சுதாரித்து கொண்ட அதிமுக, கொங்குவை விட்டுவிடக் கூடாது என வேலுமணி அதிகம் மெனக்கிட்டார். முக்கியமாக வேலுமணியின் ஸ்கெட்ச் அபாரமாக ஒர்க் அவுட் ஆகி விட்டது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு வேலுமணி தான் பொறுப்பாளர். அவர் யாரை சொல்கிறாரோ அவர்தான் வேட்பாளர் என்ற நிலைமைக்கு வந்தது.

கோவை தெற்கு மற்றும் ஊட்டி தொகுதியை மட்டும் கூட்டணி கட்சிக்கு கொடுத்துவிட்டு மற்ற தொகுதிகளை தன் தரப்பு வேட்பாளர்களை நிறுத்தினார். வேலுமணியின் திட்டமிட்ட களப்பணி + பண பலத்திற்கு திமுகவால் ஈடுகொடுக்க முடியவில்லை.. இதுவே கொங்கு மண்டலத்தின் அதிமுக வெற்றிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்ல, தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்குகள் கோவையில் திமுக கூட்டணிக்கு பின்னடைவாகியுள்ளது. திமுகவின் வாக்குகள் பெரும்பாலும் கமலுக்கு டிரான்ஸ்பர் ஆனதாகவும் சொல்லப்பட்டது. எப்போதுமே திமுகவிற்கு வரும் இஸ்லாமிய வாக்குகள் முதல்முறையாக கமல் போட்டியிட்டதால் மய்யத்துக்கு சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

Back to top button