ஆசிரியை கொலை செய்து வீட்டின் கழிவறையில் புதைத்துவிட்டு, வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை…

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆசிரியை ஒருவரை கொலை செய்து வீட்டின் கழிவறையில் புதைத்துவிட்டு, வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலம் ஆறுமுகம் நகர் பகுதியில் வசித்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் இன்று தமது வீட்டில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதகா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வீட்டில் ஆய்வு நடத்திய போது 10 பக்க கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை படித்து பார்த்த போது யோகா ஆசிரியை சித்ரா தேவியை கொலை செய்து தனது வீட்டின் கழிவறையில் புதைத்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

இதையடுத்து எதற்காக இந்த கொலை மற்றும் தற்கொலை நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் புதைக்கப்பட்ட ஆசிரியையின் உடலை தோண்டி எடுக்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் ஏப்ரல் 2-ஆம் தேதி ஆசிரியை சித்ரா தேவியை வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் கடத்தி வைத்துள்ளதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்ததாகவும் இதுகுறித்து போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

Back to top button