துக்க நிகழ்வில் ஏற்பட்ட மோதல்:பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் ஓடஓட வெட்டிகொலை செய்யப்பட்ட ரவுடி….

ஆரணியில், 24 வயதான ரவுடி பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் ஓடஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனைச் சேர்ந்தவர் 24 வயதான யோகேஷ். இவர் மீது கொலை, அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெள்ளிக்கிழமை பிற்பகலில், யோகேஷ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் அவரது பின்னால் வந்த 6 பேர் கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர்.அவர்களிடம் இருந்து தப்பித்துச் செல்ல யோகேஷ் ஓடியுள்ளார்; ஆனால் விடாமல் துரத்திய கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் விழுந்த யோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பெற்றோர், உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் ஆரணி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் துக்க வீட்டில் நடந்த மோதல் தான் கொலைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்தக் கொலை வழக்கில், 21 வயதான கோபி, 29 வயதான சங்கர், 22 வயதான சூர்யா, 21 வயதான அஜித் உள்ளிட்ட 6 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Back to top button