மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த கணவர்.! கள்ளத்தொடர்பால் வெறிச்செயல்.!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பாகலூர் கிராமின் தெருவை சேர்ந்தவர் சென்னபசப்பா (வயது 44),. இவருக்கும் கெளரம்மா (வயது 40) என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் மனைவியில் கள்ளத்தொடர்பு காரணமாக சில காலமாக கணவன் மனைவி இருவரும் அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு கணவர் சென்னபசப்பா மனைவி கெளரம்மாவை வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஶ்ரீ பசவேஸ்வர சுவாமி திருகோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு நள்ளிரவு வரை இருந்த இவர்களுக்கு இடையே கள்ளத் தொடர்பு காரணமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சென்னபசப்பா கோவில் பின்புறம் அழைந்து சென்று கெளரம்மாவில் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கெளரம்மா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனைவியை கொலைசெய்த கணவர் சென்னபசப்பா காலையில் ஓசூர் நகர காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து கொலை குறித்து வேப்பனப்பள்ளி போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சம்பவயிடத்திற்க்கு சென்ற போலிசார், கெளரம்மா உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுத் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வேப்பனப்பள்ளி போலிசார் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? என நடத்தி வருகின்றனர். கள்ளக் காதலால் கணவரே மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button