கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கொலை செய்த கோவில் குருக்கள் காவல்நிலையத்தில் சரண்…

கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கொலை செய்த கோவில் குருக்கள் தானாக சென்று காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூரில் உள்ள பைரவா கோவிலில் குருக்களாக பணியாற்றி வருபவர் சென்னபசப்பா. இவருடைய மனைவி கொளரம்மாவுக்கும் சென்னபசப்பாவின் உதவியாளருக்கும் தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சென்னபசப்பா தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத கொளரம்மா தனது கள்ள காதலருடன் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தனது மனைவி கௌரம்மாவை அங்குள்ள மலைக்கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார் சென்னபசப்பா. கள்ளக்காதல் விவகாரத்தில் அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சென்னபசப்பா கொளரம்மாவின் கழத்தை நைலான் கயிற்றால் நெருக்கி கொலை செய்துள்ளார். எனினும் கோபம் தீராததால் மனைவியின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது..

மனைவியை கொலை செய்த பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்தார் சென்னபசப்பா. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கௌரம்மாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Back to top button