கண்டா வரச்சொல்லுங்க… நடிகர் தனுஷூக்கு கடலுக்குள் பேனர் வைத்த கெத்து காட்டிய ரசிகர்கள்

நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், புதுச்சேரியில் அவரின் ரசிகர்கள் நடு கடலுக்குள் பேனர் வைத்து கெத்து காண்பித்துள்ளனர்.

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் கடலில் உள்ள இரும்பு தூண்களில் பேனர் கட்டப்பட்டுள்ளது. படகு மூலம் சென்று கடலில் இறங்கி படத்தின் பேனரை கட்டியதாக ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது நடுக்கடலில் பேனர் வைக்க ரசிகர்கள் போட்டியிடும் சூழல் புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. அஜித், சிம்புவைத் தொடர்ந்து தனுஷின் ரசிகர்களும் தற்போது வைத்துள்ளனர்.