பின்றார்யா…பினராயி விஜயன்… ஒத்த வார்த்தையில் நடிகர் சித்தார்த் வாழ்த்து…

கேரள சட்டமன்ற தேர்தலில் பினராயி விஜயன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அவருக்கு நடிகர் சித்தார்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.

இதனை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சித்தார்த் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், பின்றாருய்யா விஜயன் என ஒத்தை வார்த்தையில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

Back to top button