தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு…

அசுரன், விஸ்வாசம், ஒத்த செருப்பு போன்ற தமிழ் படங்கள் தேசிய விருதுகள் வென்றுள்ளன. சிறந்த நடிகராக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன.வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படம், சிறந்த நடிகர் என 2 விருதுகளை அசுரன் தட்டி சென்றது. வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் படத்தில் நடித்தற்காக தனுஷ் ஏற்கனவே ஒரு முறை தேசிய விருது வென்றிருக்கிறார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்ததற்காக டி.இமானுக்கு வழங்கப்படுகிறது.நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மகரீஷி படத்திற்காக சிறந்த நடனக் கலைஞராக ராஜூ சுந்தரத்துக்கு தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருகிறார்.கேடி என்ற கருப்புதுரை படத்தில் நடித்த நாகவிஷாலுக்கு குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.