நடிகர் யோகிபாபு நடித்து வெளியான மண்டேலா படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை கைது செய்யக் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
முடித்திருத்துவோர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அளித்த புகார் மனுவில் நடிகர் யோகிபாபு நடித்து வெளிவந்துள்ள மண்டேலா படத்தில் தங்கள் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில் வசனங்கள் இடம்பறெ்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும், மேலும் படத்தினை தயாரித்த சக்கரவர்த்தி ராமச்சந்திரன் மற்றும் இயக்குநர் முடோனி அஷ்நின் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் மூலம் தமிழகம் முழுவதிலும் இருக்கும் தங்களது சமுதாயத்தைச் சேர்ந்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.