தமிழகத்தில் கொரோனா கட்டுபாடு…. கர்ணன் படம் வெளியாவது குறித்து தாணு அப்டேட்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது.

இதன்படி ஏப்ரல் 10 முதல் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கர்ணன் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகுமா என்கிற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்தது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கர்ணன்’. இந்தப் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்தார்.

இதற்கிடையே ரசிகர்களிடம் கேள்வி எழுந்த நிலையில்,  திட்டமிட்டபடி நாளை கர்ணன் படம் வெளியாகும் என  தாணு தெரிவித்துள்ளார்

மேலும் அதில், சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்