ஏ.ஆர்.முருகதாஸின் நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ..!!!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்துக்கு 1947 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்திக்குப் பின், அவர் இந்தியில் இயக்கிய அகிரா, தமிழ், தெலுங்கில் இயக்கிய ஸ்பைடர் இரண்டும் பெரிய வெற்றி வாய்ப்பை எட்டவில்லை. அதற்குபின் சர்கார் லாபத்தை தந்தாலும் கிரியேட்டராக முருகதாஸுக்கு அந்த அளவிற்கு பெருமையை சேர்க்கவில்லை.

தற்போது முருகதாஸ் லைகாவின் ராங்கி படத்தின் கதையை எழுதியுள்ளார். இதில் த்ரிஷா நடிக்கிறார்.

இதையடுத்து 1941 என்ற படத்தை தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இணை தயாரிப்பு ஓம் பிரகாஷ் பட். பொன் குமரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. விரைவில் படம் குறித்தும் அதில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தும் முறைப்படி அறிவிக்க உள்ளனர்.

Back to top button