அண்ணாத்த-க்கு அடுத்து புதிய படத்தில் நடிக்க தயாராகும் ரஜினிகாந்த்…!!!

’அண்ணாத்த’ படத்தையடுத்து, புதிய திரைப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

’பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான் நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கி பாராட்டை பெற்ற தேசிங் பெரியசாமி ஆகியோரிடம் ரஜினிகாந்த் கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், யாருடைய படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது.

Back to top button