படப்பிடிப்புக்காக ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த்… இனிமேல் ஜாலி தான்…

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் “அண்ணாத்த” . இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைக்கும் இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் 13 ஆம் தேதி படப்பிடிப்புக்காக ரஜினி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். அடுத்த ஒருவாரத்தில் படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தது.

ஆனால் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பினார். அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற அதிர்ச்சி அறிவிப்பையும் வெளியிட்டார்.

இதனிடையே கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக  புறப்பட்டுச் சென்றார்.

Back to top button