நான் வாக்களிச்சிட்டேம்பா… விரலை காட்டி விளக்கம் கொடுத்த இயக்குநர் சமுத்திரகனி…

சமூக கருத்துக்களை எடுத்துரைக்கும் படங்களில் நடித்து விட்டு, சமுத்திரகனி தேர்தலில் வாக்களிக்காமல் இருந்து விட்டாரே என விமர்சனம் எழுந்த நிலையில், தான் வாக்களித்துவிட்டேன் என மை விரலை காட்டி சமுத்திரகனி விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்திருந்தனர்.

இதில் முதல் ஆளாக வந்து வாக்களித்த அஜித் மற்றும் சைக்கிளில் வந்து ஓட்டுப்போட்ட விஜய் ஆகியோரே பிரபலமாக பேசப்பட்டனர். நடிகைகள் சிலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியிருந்தனர்.

ஆனால் தேர்தலில் பிரச்சாரம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நவரச நாயகன் கார்த்திக் உள்ளிட்ட சில பிரபலங்கள் வாக்களிக்க வரவில்லை என இணையத்தில் விமர்சிக்கப்பட்டது. இந்த லிஸ்டில் இயக்குனர் சமுத்திரகனியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் இந்த தகவலை பார்த்து அதிர்ந்து போன அவர், தான் காலையிலேயே சென்று வாக்களித்துவிட்டதாக கூறி, மையுடன் கூடிய கைவிரலை காட்டி வீடியோ  வெளியிட்டுள்ளார். மேலும், ஜனநாயக கடமையை நிறைவேற்றியதை  தான் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை என விளக்கமளித்து விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Back to top button