வானதி ஜெயிச்சாச்சு…வலிமை அப்டேட் கிடைக்கும்… எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள்…

தான் ஜெயித்தால் வலிமை அப்டேட் கிடைக்கும் என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு மீண்டும் வைரலாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்துள்ளார். இந்த வெற்றியை பாஜக தொண்டர்களை தாண்டியும் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

காரணம் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதும், ட்விட்டரில் மார்ச் 14 ஆம் தேதி இணையவாசி ஒருவர் அவரிடம் வலிமை அப்டேட் எப்ப? என கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த வானதி ”நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி”  என தெரிவித்திருந்தார். இதனால் அடுத்ததாக அவர் வலிமை அப்டேட்டை தயாரிப்பாளர் போனிகபூரிடம் வாங்கி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Back to top button