“தடுப்பூசி எங்கடா டேய்”….. நடிகர் சித்தார்த் வைரல் ட்வீட்

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையில் அனைவரும் சிக்கி தவித்து வருகின்றனர்.. இதற்கு தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தடுப்பூசி ஸ்டாக் இல்லை என்பதால் மூன்று வாரங்கள் தாமதம் ஆகலாம் என  மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

இதற்கு நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார். அதில் இந்த வருடத்தின் இறுதியில் கொரோனாவுக்கு எதிரான மாத்திரைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. உண்மையிலேயே இது வரவேற்கத்தக்க ஒன்று. இருப்பினும் நாம் அனைவரும் தடுப்பூசியை விரைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தடுப்பூசிகளே இல்லாமல் எப்படி தடுப்பூசி போட்டுக்கொள்வது? தடுப்பூசிகளை எங்கே?

 

 

https://twitter.com/Actor_Siddharth/status/1388360271467405319?s=20
மற்றொரு டுவிட்டர் பதிவில், “தடுப்பூசி எங்கடா டேய்” என்றும் நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
Back to top button