மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 நோயாளிகள் உயிரிழப்பா..?

மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பால்கர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் 7 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நோயாளிகள் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவர்களின் அலட்சிய போக்கே உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி ஏராளமான மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Back to top button