வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாஜகவின் முக்கிய தலைவர் ராஜினாமா.!

உத்தர பிரதேச பாஜக பெண்கள் ஆணைய உறுப்பினரான பிரியம்வதா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு, பாஜக மத்திய அரசால் கொண்டு வந்த சட்டம் தான் வேளாண் சட்டம் 2020. இந்த சட்டமானது விவசாயிகளுக்கு எதிரானது எனக் கூறி விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், தொடர்ந்து ஐந்து மாதங்கள் இந்திய தலைநகரான தில்லியில் ஒட்டு மொத்த விவசாயிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகளும், விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கியது. இதனைத்தொடர்ந்து இந்த போராட்டமானது கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பேசப்பட்டது. பின்னர் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாடு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் குரலெழுப்பினர்.

இதனையடுத்து தற்போது அனைவரும் கண்டு வியக்கத்தக்க சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மத்திய பாஜக
அரசால் கொண்டு வந்த வேளாண்சட்டத்துக்கு எதிராக குரலெழுப்பி வந்தவர்களில் ஒரு குரலாக உத்தர பிரதேச பாஜக தலைவர் பெண்கள் ஆணைய உறுப்பினர் பிரியம்வதா தோமரின் குரல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று பாஜக தலைவர் பிரியம்வதா தோமர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் சுவாதந்திரதேவ் சிங்கிற்கு பிரியம்வதா எழுதிய கடிதத்தில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்துவருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் மட்டும் எதிரானது அல்ல, எனது கொள்கைகளுக்கு எதிரானவை. எனவே ராஜினாமா செய்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.