2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும்: மத்திய அரசு அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இதனை த்தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி நாளை முதல், நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படுகிறது. இந்நிலையில் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள http://cowin.in என்ற வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Back to top button