ஆன்லைன் வகுப்பால் எல்லாம் மிச்சம்… கல்வி கட்டணத்தை குறைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் மின்சாரம், வாகனம் என பல்வேறு வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவு குறைந்துள்ளதால்,கல்வி கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் நடப்பு கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் ஆன்லைன் மூலமாக கல்வியைப் பயின்று வருகின்றனர்.

தற்போது மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வருவதால் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. இதனால் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தானில் சி.பி.எஸ்.இ பள்ளிகள் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது

Back to top button