புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…

வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு ஆய்வறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டத்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வந்தனர். அத்துடன் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த, 126 நாட்களாக வெயில், மழை, பனி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் 3 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை அமைத்தது. இந்த ஆய்வு குழு விவசாய சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளில் இருந்து கருத்துகள் பெற்று அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்தது. இந்த நிலையில் வேளாண சட்டம் பற்றிய ஆய்வறிக்கையினை சீலிட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆய்வு குழுவினர் தாக்கல் செய்தனர்.இதில் வேளாண் சட்டங்களில் இருக்கக்கூடிய நிறைகுறைகள் அதனை தீர்க்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது.

Back to top button