தொடர்ந்து 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா..? உஷார் மக்களே

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சமீபத்தில் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டதால் 4 நாட்கள் தொடர்ந்து வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டது..இந்த நிலையில் வரும் வாரத்திலும் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை வரவுள்ளது.

இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் சேவை தடைபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விடுமுறையானது வரும் மார்ச் 27ம் தேதி தொடங்கி
ஏப்ரல் 4ஆம் தேதி வரையில், ஏழு நாட்கள் விடுமுறையாக
உள்ளது.

2 நாட்கள் மட்டுமே இந்த காலகட்டத்தில் வங்கிகள்
இயங்கும் நிலை உள்ளது. மற்ற நாட்கள் அனைத்தும்
விடுமுறை. இதனால் வங்கி தொடர்பாக ஏதேனும்
வேலைஇருந்தால் முன்கூட்டியே செய்து கொள்ளவது
நல்லது

மார்ச் 27 – மாதத்தின் 4வது சனிக்கிழமை

மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை

மார்ச் 29 – ஹோலி விடுமுறை

மார்ச் 30 – பாட்னா வங்கிகளுக்கு விடுமுறை (தமிழகம்
உள்பட மற்ற இடங்களில் உண்டு)

மார்ச் 31- நிதியாண்டின் கடைசி நாள் என்பதால்
முழுமையான சேவைகளைப் பெற முடியாது.

ஏப்ரல் 1 – வங்கிகள் வருடாந்திர கணக்குகளை மூடும் நாள்
என்பதால் வங்கி சேவைகள் முழுமையாக மூடப்படும்.

ஏப்ரல் 2 – புனித வெள்ளி

ஏப்ரல் 3 – சனிக்கிழமை அன்று மட்டும் வங்கிகள் இயங்கும்

ஏப்ரல் 4 – ஞாயிற்றுகிழமை என்பதால் வங்கி விடுமுறை

மேற்கண்ட இந்த விடுமுறை நாட்களில் வங்கிகள் இரு
நாட்கள் மட்டுமே செயல்படும். ஆகவே இந்த விடுமுறை
கால கட்டத்தில் வங்கி பரிவர்த்தனைகள் செய்ய முடியாது
என்பதால், அதற்கேற்ப மக்கள் செயல்படுவது நல்லது.