சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் திடீர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்

பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

பிரபல தொலைக்காட்சிகளின் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகர் வெங்கடேஷ்

இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ்க்கு இன்று மதியம் சுமார் 2.30 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும் அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்