தனிமைப்படுத்தப்பட்ட சென்னை அணி… ராஜஸ்தானுடனான நாளைய ஆட்டம் ரத்து…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. பயோ-பபுள் எனப்படும் கட்டுப்பாட்டு வளையத்தையும் மீறி  கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கு நேற்று கொரோனா உறுதியானது.

இதனையடுத்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தை பராமரித்து வரும் கிளீனர் உட்பட மூவருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் நாளை நடக்கும் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Back to top button