கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் முழுவதும் ரத்து… ரசிகர்கள் ஏமாற்றம்…

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள்,ஊழியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. பயோ-பபுள் எனப்படும் கட்டுப்பாட்டு வளையத்தையும் மீறி  கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தை பராமரித்து வரும் ஊழியர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

இதனால் நேற்று நடக்கவிருந்த பெங்களூர் – கொல்கத்தா, நாளை நடக்கவிருந்த சென்னை -ராஜஸ்தான் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று ஹைதராபாத் அணி வீரர் விருத்திமான் சஹா மற்றும் டெல்லி அணி வீரர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Back to top button