உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி…

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பறக்கும் படையினர் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர் இதில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு முசிறி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான செல்வராசு க்கு சொந்தமான காரில் ஒரு கோடி ரூபாய் பிடிக்கப்பட்டது அதே போன்று இரு தினங்களுக்கு முன்பு மணப்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சந்திரசேகரின் வாகன ஓட்டுனரின் இல்லத்தில் ஒரு கோடி ரூபாய் பிடிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய்க்கு மேலாக ரொக்கம் பிடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அடுத்து மலைக் கோட்டை அருகேபெரிய கடைவீதியில் மூன்றுபேர் வந்த வாகனத்தை பரிசோதனை செய்ததில் 5 கிலோ 961 கிராம தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு அவர்கள் தங்கநகைகளை யாருக்கு கொண்டு சென்றார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிடிபட்ட நகைகள் அனைத்தும் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் கோட்ட அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு கிழக்கு வட்டாட்சியரின் தேர்தல் அலுவலருமான குகன் முன்னிலையில் சரி செய்யப்பட்டு பின்னர் இதனை தொடர்ந்து நகைகளை அரசு கருவூலத்திற்கு கொண்டு சென்றனர்.

Back to top button