“வாக்களித்ததற்கு நன்றி”… எல்.முருகனுக்கு வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு

தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் எல்.முருகன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழியைவிட 1,393 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார்.

இதனையடுத்து எல்.முருகனுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அண்ணா சிலை அருகே பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே திமுகவினரும் நன்றி அறிவிப்பு பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில் எல்.முருகனுக்காக வைக்கப்பட்ட பேனரை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Back to top button