இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்

நாளை முதல் நான்கு நாட்களுக்கு தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில், நிலவிவரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பிற மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.