அட கொடுமையே!! அமமுக தோற்றது இப்படித்தானா… அதிர்ச்சியில் உறைந்த தினகரன்!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக 161 தொகுதிகளிலும், கூட்டணிக்கு வந்த தேமுதிக 60 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

ஜெயலலிதா மறைவிற்கு பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை எதிர்த்து மெகா வெற்றி பெற்ற தினகரன் இந்த தேர்தலில் அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு எதிராக கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதோடு போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அமமுக தோற்றது. கூட்டணியில் இருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட்டை இழந்தார்கள்.

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அமமுக பொதுச் செயலாளர் தினகரன், முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களைத் தொடர்புகொண்டு, “தைரியமாக இருங்கள் பார்த்துப்போம்” என ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் சில நிர்வாகிகளிடம் பேசிய தினகரனுக்கு பயங்கர ஷாக் தகவல்களை சொல்லியிருக்கிறார் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பழனியப்பன்.

பழனியப்பன் பிரச்சாரத்தில் இருந்தபோது பெண்களிடம், ‘ நீங்க யாருக்கு வாக்களிப்பீர்கள்?’ என்று கேட்டபோது, ’நீங்க எங்க வீட்டு பிள்ளை. எங்கள் ஒட்டு உங்களுக்குதான். எப்போதும் இரட்டை இலை சின்னத்தில் தான் போடுவோம்’ என்று தெரிவித்துள்ளனர். இதை தேர்தல் முடிவுக்குப் பிறகு தினகரனிடம் தெரிவித்த பழனியப்பன், “மக்கள் அமமுகவினரை அதிமுகவாகத்தான் பார்க்கிறார்கள். குறிப்பாக கிராமப்புற மக்கள் அம்மா என்று நாம் சொன்னாலே இரட்டை இலை என்றுதான் சொல்கிறார்கள்’என்று தினகரனிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல தான் சீட் கொடுக்காததால் அதிமுகவிலிருந்து வெளியேறிய தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறையில் சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் உங்களுக்கு தான் எங்கள் ஒட்டு, கண்டிப்பாக இரட்டைஇலையில்தான் போடுவோம் என்று சொன்னது அவருக்கு ஷாக் தான். அதே போல தான் பல தொகுதிகளில் தினகரன் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

Back to top button