தந்தையின் கனவை நனவாக்க வாய்ப்பு கொடுங்கள்.. விஜய் வசந்த் பிரச்சாரம்

கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு காலமானார்.

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தலோடு இணைந்து நடைபெற உள்ளது..
இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது பிரச்சாரத்தை இன்று சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் முன்பு தொடங்கினார்.

அவருடன் மதசார்பற்ற கூட்டணி கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் உடன் திறந்த வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்..

அப்போது பேசிய விஜய் வசந்த் ;-

தனது தந்தை விட்டுச்சென்ற பணிகளை தொடர தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்