லஞ்ச ஒழிப்பு துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, சுதந்திரமாக செயல்படுகிறதா..? உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கருப்பு எழுத்து கழகம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர் நீதிபதிகள். மேலும் ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது வேதனை தெரிவித்த நீதிபதிகள், ஊழல் காரணமாக நில அபகரிப்புகள் நடப்பதாகவும், நீர் நிலைகள் மாயமாவதாகவும் குறிப்பிட்டனர்.

அத்துடன் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது?

கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து மூன்று வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.