பிறந்த நாளை மறந்து கடமையே முக்கியம் என பணிக்கு வந்த காவலர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சக காவலர்கள்…

கரூரில் பிறந்த நாளை மறந்து. கடமையே கண்ணாக பணியாற்றிய காவலர்களுக்கு உயர் அதிகாரிகள் முன்னிலையில், சக காவலர்கள் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கரூர் நகர காவல் நிலையம், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் முதல்நிலை காவலர்களாக பணியாற்றுபவர்கள் நளினி மற்றும் ராஜேந்திரன். கடந்த சில நாட்களாக ஊரடங்கு கால பணி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இன்று பிறந்த நாள் காணும் இவர்கள் இருவரும், வழக்கம் போல்சீருடை அணிந்துகொண்டு பணிக்கு வந்திருந்தனர்.

ஆனால் அங்கு உயர் அதிகாரிகள் முன்னிலையில், காவலர்களின் பெயர் எழுதப்பட்ட பிறந்த நாள் கேக் தயாராக இருந்தது. உயர் அதிகாரிகளுடன் சக காவலர்கள் பிறந்த நாள் வாழ்த்து பாட, பிறந்த நாள் காவலர்கள் இன்ப அதிரிச்சியில் மூழ்கினர். கேக் வெட்டப்பட்டு, பொன்னாடை அணிவிக்கப்பட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவர்களது குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், இருவருக்கும் விடுப்பு அளிக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விடுமுறையே இல்லாமல் பணி செய்து வரும் காவலர்களுக்கு, இந்நிகழ்ச்சி ஒரு பிறந்த நாள் பரிசாகவே இருந்தது.

Back to top button