முககவசத்துக்காக விரட்டிய போலீஸ்… ஓட ஓட கீழே விழுந்த தங்கச்சங்கிலிகள்… வசமாக சிக்கிய வடமாநில ஆசாமி…

சென்னையில் முககவசம் அணியாமல் சென்ற நபரை பிடிக்க முயன்ற போது 2 கிலோ தங்க நகைகள் சிக்கியது.

சென்னை பெரியமேடு அருகே போலீசார் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வடமாநில நபர் ஒருவர் முககவசம் அணியாமல் வந்ததால், போலீசார் அந்த நபரை அழைத்த போது அவர் வேகமாக ஓடியுள்ளார்.

இதில் அவரது ஆடையில் இருந்து தங்க சங்கிலி விழுந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை விரட்டி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரது ஆடைக்குள் 2 கிலோவுக்கும் அதிகமான தங்க சங்கிலிகள், வளையல் உள்ளிட்டவை இருந்தன. விசாரணையில் அவர் தங்க நகை பாலிஷ் செய்யும் கிதாபுல் மண்டல் என்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்களைக் காண்பித்ததால் அவரை போலீசார் விடுவித்தனர்.

ஆனால் முககவசத்துக்கு அபராதம் செலுத்த பயந்தா அந்த நபர் இப்படி ஓடினார் என பரபரப்பு நிகழ்வை பார்த்து கொண்டிருந்த பலரும் கூறிக்கொண்டனர்.

Back to top button