சீமான் தொகுதியில் ஒரு லட்சம் பேர் வாக்களிக்கவில்லை… அதிர்ச்சி தகவல்

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் ஒரு லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகவில்லை.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கே.பி.சங்கர், அதிமுகவில் கே.குப்பன், மநீமவில் மோகன், அமமுக சார்பில் சவுந்திரபாண்டியன் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

ஆனால் திருவொற்றியூரில் 65% மட்டுமே வாக்குகள் பதிவானது. கிட்டதட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதனால் அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மொத்தம் பதிவான வாக்குகளால் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவதில் இழுபறி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.