நடந்த சம்பவத்திற்கு ஆக்ஷன் எடுத்த ஸ்டாலின்… ஓபிஎஸ் கண்டனம்!! அறிக்கை விடலாமா வேனாமான்னு யோசிக்க இவ்ளோ நேரமா?!

அறிக்கை விடலாமா வேனாமான்னு யோசிக்க இவ்ளோ நேரமா?! சம்பவம் முடிந்து தவறு செய்தவா்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, அண்டை மாநிலங்கள் தொடங்கி அயல்நாடுகள் வரை பின்பற்றும், ஏழை எளியோரின் பசிப்பிணி நீக்கும் அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! என முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னையில் முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை 2-4 மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த உணவகத்தை சூறையாடும் காட்சிகள் இன்று காலையில் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கையில் திமுக தலைவர் ஸ்டாலினின் படத்தை வைத்திருந்ததால், இதில் ஈடுபட்டவர்கள் தி.மு.கவினர் என உறுதிசெய்யப்பட்டது.

இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து அம்மா உணவகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினரை அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார் ஸ்டாலின். மேலும் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாக சைதாப்பேட்டையில் ஜெயித்த மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

இந்நிலையில் சம்பவம் நடந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்ட பின் ஓபிஎஸ் அறிக்கைவிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Back to top button