பூம்புகார் தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் மறுவாக்குப்பதிவு நடத்த முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டதிற்குட்பட்ட பூம்புகார் தொகுதியில் உள்ள திருவாவடுதுறை அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மொத்தம் 578 வாக்குகள் இருந்தன.
ஆனால் ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு 628 ஆக இருந்துள்ளது. இதுபற்றி கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் விடிய விடிய போராட்டம் நடத்தினர். இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வேட்பாளர்களின் முகவரகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.