சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் விருப்பம்

10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு சிபிஎஸ்இ தேர்வுகள் நடக்கும் என தெரிவித்துள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலையிட்டு அனைத்துத் தேர்வுகளையும் இந்த ஆண்டு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என ட்விட்டரில் பலரும் தெரிவித்துள்ளனர். வகுப்புகள் ஆன்லைனில் நடத்தும்போது, தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

#cancelboardexams2021 என்ற ஹேஸ்டேக்கில் கடந்த 2 நாட்களாக ட்விட்டரில் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டதோடு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்ட மனுக்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தியுள்ளனர்.